தற்போது 'குத்தாலம்' என்று அழைக்கப்படுகிறது. மாயவரத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் இரயில் பாதையில் மாயவரத்துக்கு தென்கிழக்கே சுமார் 9 கி. மீ. தொலைவில் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். உத்தாலமரம் தலவிருட்சம் ஆதலால் அது மருவி 'குத்தாலம்' என்று ஆனது. காவிரி ஆற்றுக்கிடையே இருந்ததால் 'திருத்துருத்தி' என்று அழைக்கப்பட்டது. சுந்தரமூர்த்தி நாயனார் இத்தலத்தில் உள்ள குளத்தில் நீராடிய பின்னர் அவரது உடற்பிணி தீர்ந்தது. |